என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரனில் விக்ரமசிங்கே"
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.13.5 கோடி செலவில் 155 புதிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.
ஒவ்வொரு வீடும் 7 பெர்ச் (1905 சதுர அடி) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மற்ற கட்டுமான வசதிகளுடன் ஒப்பிடும்போது, இந்த கட்டிடங்கள் பசுமை கிராமங்கள் எனும் அரசின் திட்டத்தின் கீழ் கூடுதல் வசதியுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.
புதிய வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்திய தூதர் தரஞ்சித் சிங், வாழ்த்துக்கள் கூறினார். மேலும் இலங்கைக்கு 5000 கோடி ரூபாய் செலவில் இந்தியா வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 63000 வீடுகளில் 47000 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசுகையில், ‘இந்த சிறந்த திட்டத்தினை செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கு இலங்கையின் முன்னேற்றம் மீதான முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் விதமாக இச்செயல் இருக்கிறது. இதேபோன்று இந்தியா- இலங்கை மக்களுக்கு இடையேயான நட்புறவு அமைதியாகவும், வளமாகவும் தொடர வேண்டும்’ என கூறினார். #IndiaHousingProject #SrilankaPlantationworkers #RanilWickremesinghe #SriLankaPM
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா பதவியில் இருந்து நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்கினார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே இலங்கை அரசியலில் குழப்பம் நிலவியது.
அதன்பின்னர் ஏற்பட்ட குழப்பம் நீங்கி ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதே நேரம் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபச்சே ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
“பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு பாராளுமன்றத்தில் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாததால் அவரால் புதிய சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது.
இதனால் நாட்டில் பிளவு ஏற்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ரனில் விக்ரமசிங்கே நிறைவேற்றவில்லை. எனவே இது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது.
எனவே தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் பேசும்போதும் இதே கருத்தை தான் அவர் வலியுறுத்தினார்.
ரனில் விக்ரமசிங்கே அரசு அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து புதிய சட்ட வரையறு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் சிங்களர்களின் ஆதிக்கம் குறைந்து விடும் என ராஜபக்சே அரசு குற்றம் சாட்டி வருகிறது. #Rajapaksa
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார்.
இதனால் இலங்கை அரசியலில் வரலாறு காணாத குழப்பம் நிலவியது. இதனால் சிறிசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது. இதைப்போல ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான மந்திரி சபை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட கோர்ட்டு உத்தரவையும் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பார் எனவும், இந்த பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 30 பேர் கொண்ட மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) பதவியேற்கிறது.
முன்னதாக, ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக ஒரு போதும் நியமிக்கமாட்டேன் என அதிபர் சிறிசேனா கூறி வந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவருடன் தொலைபேசியில் பேசிய சிறிசேனா, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.
தங்கள் தலைவருக்கு (ரனில் விக்ரமசிங்கே) பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என அதிபரின் செயலாளர் தெரிவித்தாக, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் அகிலா விராஜ் காரியவாசம் கூறினார். முன்னதாக ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் திடீரென பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பதை தொடர்ந்து, அங்கு சுமார் 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது. #RanilWickremesinghe #SriLanka #PrimeMinister #MahindaRajapaksa
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
அதில் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இடம் பெற்றுள்ளன.
இந்த 2 கட்சிகளுக்கு இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை சுதந்திரா கட்சியின் கொள்கை உருவாக்க மத்திய கூட்டம் நேற்று கொழும்பில் நடந்தது. அதில் தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
சமீபத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் சந்தித்து பேசினர். அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ராஜபக்சே புதிய கட்சி தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 2020-ம் ஆண்டுக்கு முன்பே தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகிறார்.
இக்கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர் ஆதரித்தனர்.
விக்ரமசிங்கேவின் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள 16 மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஏற்கனவே அதிபர் சிறிசேனாவுக்கு இதுகுறித்து கடிதமும் எழுதப்பட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடி காரணமாக கூட்டணி அரசில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலகும் முடிவை சிறிசேனா மேற் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இலங்கை சுதந்திரா கட்சியின் மந்திரிகள் சிலர் கூட்டணி அரசில் இருந்து பதவி விலகினர். பின்னர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை தமிழ் மற்றும் முஸ்லிம் மைனாரிட்டி கட்சி எம்.பி.க்கள் உதவியுடன் ரனில் விக்ரமசிங்கே முறியடித்தார். #RanilWickremesinghe #MaithripalaSirisena
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் அவருடைய மனைவி மைத்ரி விக்ரமசிங்கே ஆகியோர் இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
அங்கிருந்து, இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தனர். அங்கு, இலங்கை பிரதமரை ஆந்திர அரசு சார்பில் சுரங்கத்துறை அமைச்சர் சுஜயா கிருஷ்ணரங்காராவ், அதிகாரிகள் வரவேற்றனர்.
திருப்பதியில் வழிபாடு செய்த பிறகு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மனைவியுடன் திருப்பதியில் இருந்து இலங்கைக்கு திரும்பினார். பிரதமர் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலை மட்டுமின்றி வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. #SriLankanPM #RanilWickremesinghe #TirupatiTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்